தஞ்சாவூர்

பட்டுக்கோட்டை பாலிடெக்னிக் கல்லூரியில் விளையாட்டுப் போட்டி

11th Aug 2019 04:38 AM

ADVERTISEMENT


 பட்டுக்கோட்டை பாலிடெக்னிக் கல்லூரியில் விளையாட்டுப் போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்வுக்கு கல்லூரித் தாளாளர் எஸ்.டி.எஸ்.செல்வம் தலைமை வகித்து, போட்டியைத் தொடக்கி வைத்தார்.   ஓட்டம், தொடர் ஓட்டம்,  குண்டு, வட்டு எறிதல், நீளம், உயரம் தாண்டுதல் போட்டிகள் மாணவர்களுக்கும்,  ஓட்டம் மற்றும் குண்டு எறிதல் போட்டிகள் மாணவிகளுக்கும் நடத்தப்பட்டன. 
கல்லூரி உடற்கல்வி இயக்குநர் ஜெ.ராஜமாணிக்கம், அரசு மற்றும் தனியார் பள்ளி உடற்கல்வி ஆசிரியர்கள் கே. ராமமூர்த்தி, ஏ. ராஜா,  டி. கார்த்திகேயன், ரமேஷ் ஆகியோர் போட்டி நடுவர்களாக செயல்பட்டனர். 
தொடர்ந்து நடைபெற்ற நிறைவு விழாவில், பட்டுக்கோட்டை டி.எஸ்.பி. எஸ்.கணேசமூர்த்தி பங்கேற்று, வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள், ஆசிரியர்களுக்குப் பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். கணினியியல் துறைத் தலைவர் டி. வின்சென்ட் நிகழ்வை தொகுத்தளித்தார். முன்ன்னதாக கல்லூரி முதல்வர் வீ. முத்துவேலு வரவேற்றார்.  நிறைவில், துணை முதல்வர் அ.அமலோற்பவச்செல்வி நன்றி கூறினார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT