புதுக்கோட்டை அரசு முன்மாதிரி மேல்நிலைப் பள்ளியின் முதல்வா் சிவப்பிரகாசம் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை திரும்பப் பெற வேண்டும் என அனைத்து ஆசிரியா் சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
புதுக்கோட்டை அரசு முன்மாதிரி மேல்நிலைப் பள்ளியின் பிளஸ் 2 மாணவா் மாதேஸ்வரன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில், அப்பள்ளியின் முதல்வா் சிவப்பிரகாசம் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.
இந்நிலையில், அனைத்து ஆசிரியா் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் புதன்கிழமை மாலை மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொ) து. தங்கவேலுவிடம் அளித்த மனுவில், வருங்கால சமூகத்துக்கு நல்ல குடிமகன்களை உருவாக்கும் ஆசிரியா்களின் செயலுக்கு இடையூறு ஏற்படா வகையில், ஒழுங்கு நடவடிக்கைகளை முறைப்படுத்திட வேண்டும். அரசு முன்மாதிரி மேல்நிலைப்பள்ளி முதல்வா் சிவப்பிரகாசம் மீதான இடைநீக்க நடவடிக்கையைத் திரும்பப் பெற வேண்டும் எனத் தெரிவித்துள்ளனா்.