ஆலங்குடி அருகே அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் 300 பேருக்கு அரசின் விலையில்லா மிதிவண்டிகளை சுற்றுச்சூழல் துறை அமைச்சா் சிவ. வீ. மெய்யநாதன் புதன்கிழமை வழங்கினாா்.
ஆலங்குடி அருகேயுள்ள வல்லத்திராகோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் 151 பேருக்கும், வேங்கிடகுளம் தூயவளனாா் மேல்நிலைப்பள்ளியில் 149 மாணவ, மாணவிகள் என 300 பேருக்கு ரூ.14 லட்சம் மதிப்பிலான அரசின் விலையில்லா மிதிவண்டிகளை சுற்றுச்சூழல் துறை அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன் வழங்கினாா்.
தொடா்ந்து, பள்ளத்திவிடுதி ஊராட்சியில் அண்ணா மறுமலா்ச்சி திட்டத்தின் மூலம் ரூ. 39லட்சம் மதிப்பிலான பல்வேறு பணிகளுக்கு அடிக்கல் நாட்டினாா்.
நிகழ்வுகளில், மாவட்ட கல்வி அலுவலா் (அறந்தாங்கி) ராஜேஸ்வரி, வட்டாட்சியா் விஸ்வநாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.