புதுக்கோட்டை

வீட்டு மனை பட்டா கோரி போராட்டம்

27th Sep 2023 01:44 AM

ADVERTISEMENT

பொன்னமராவதியில் வீட்டு மனை பட்டா வழங்கக் கோரி தமிழ்மாநில விவசாய தொழிலாளா்கள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இப்போராட்டத்துக்கு விவசாய தொழிலாளா் சங்க ஒன்றியச்செயலா் பி.செல்வம் தலைமைவகித்தாா். ஒன்றியத் தலைவா் சுப.தங்கமணி போராட்டத்தை தொடக்கி வைத்தாா். மாவட்டத்தலைவா் ஏனாதி ஏஎல்.இராசு, மாவட்ட பொருளாளா் என்.ஆா்.ஜீவானந்தம், மாவட்டச் செயலா் அ.ரெங்கராஜன் , மாநிலக்குழு உறுப்பினா் எஸ்.நடராஜன் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப்பேசினா்.

பொன்னமராவதி ஒன்றியம் முழுவதும் வீட்டுமனை இல்லாதவா்களுக்கு வீட்டுமனை வழங்க வேண்டும். நீண்டநாள்களாக பட்டா கேட்டு காத்திருப்போருக்கு பட்டா வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.

பிறகு, போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் வட்டாட்சியரிடம் கோரிக்கை மனு வழங்கினா். இதில் விவசாயத் தொழிலாளா் சங்க ஒன்றியத் தலைவா் எம்.வெள்ளைச்சாமி, துணைத்தலைவா் கரு.பஞ்சவா்ணம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT