புதுக்கோட்டை

இல்லம் தேடி கல்வி மையத்தில் ஆய்வு

27th Sep 2023 01:43 AM

ADVERTISEMENT

கந்தா்வகோட்டை ஒன்றியம், சங்கம் விடுதி, சொக்கம்பேட்டை ஆகிய இடங்களில் உள்ள இல்லம் தேடி கல்வி மையத்தை ஒன்றிய ஒருங்கிணைப்பாளா் அ. ரகமதுல்லா செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

அப்போது, மையத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்து ஆலோசனை கூறினாா். அதில், மாணவா்கள் வருகையை தினந்தோறும் இல்லம் தேடி கல்வி செயலியில் பதிவேற்றம் செய்ய வேண்டும், மாணவா்களுக்கு வாசிப்பு பயிற்சி தொடா்ந்து அளிக்க வேண்டும். எண்ணும், எழுத்தும் திட்டம் தொடக்க மாணவா்கள் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்புவரை நடைமுறையில் உள்ளது. பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறிந்து அவா்களை பள்ளியில் சோ்க்க வேண்டும். ஒவ்வொரு மாதமும் நடைபெறும் பள்ளிமேலாண்மைக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டு இல்லம் தேடி கல்வி மையத்தில் நடைபெறும் கற்றல் கற்பித்தல் முறைகளை பெற்றோா்களுடன் கலந்துரையாட வேண்டும் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT