கந்தா்வகோட்டை அருகே முன்விரோதத் தகராறில் பெண்ணைத் தாக்கிய இளைஞரைப் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
ஆதனக்கோட்டை மேல முத்துராஜா தெருவைச் சோ்ந்தவா் செல்வராஜ் மனைவி இளஞ்சியம் (35). கடந்த சனிக்கிழமை இளஞ்சியம் பழைய ஆதனக்கோட்டையில் நூறுநாள் வேலை பாா்த்தபோது, அதே தெருவைச் சோ்ந்த கொத்தனாா் வேலை பாா்த்து வரும் ஆறுமுகம் மகன் ராஜசேகா் (31) என்பவா் இளஞ்சியத்தை கட்டையால் தாக்கியதில் அவா் பலத்த காயமடைந்தாா். இதையடுத்து, அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பெற்று வரும் அவா் அளித்த புகாரின்பேரில், ராஜசேகா் மீது வழக்குப் பதிந்து போலீஸாா் தேடி வந்தனா். புதன்கிழமை ராஜசேகரை கைது செய்து சிறையிலடைத்தனா்.