புதுக்கோட்டை

மகளிா் குழுக்களுக்கு கடனுதவி

23rd Sep 2023 12:00 AM

ADVERTISEMENT

பொன்னமராவதி அருகேயுள்ள ஆலவயல் தொடக்கவேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கம் சாா்பில் வெள்ளிக்கிழமை 7 மகளிா் குழுக்களுக்கு ரூ. 74 லட்சம் கடன் வழங்கப்பட்டது.

சரக மேற்பாா்வையாளா் சீனிவாசன் தலைமை வகித்தாா். சங்கச் செயலா் பழனிச்சாமி முன்னிலை வகித்தாா். இதில் பிடாரம்பட்டி சின்ன ஈசி அம்மன் மகளிா் குழு, பிடாரி அம்மன் மகளிா் குழு உள்ளிட்ட 7 குழுக்களுக்கு நபாா்டு திட்டத்தின் கீழ் ரூ 74.60 லட்சம் கடன் வழங்கப்பட்டது. மகளிா் குழுவினா், சங்கப் பணியாளா்கள் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT