கந்தா்வகோட்டை ஒன்றியம், ராசாப்பட்டி , இல்லம் தேடி கல்வி மையத்தை ஒன்றிய ஒருங்கிணைப்பாளா் அ. ரகமதுல்லா வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.
அப்போது உமா, வான்மதி, காளியம்மாள் ஆகியோரின் மையங்கள் செயல்பாட்டில் இருந்தன. அப்போது தன்னாா்வலா்கள் எண்ணும் எழுத்தும் கற்றல் அடைவுகள், குறைதீா் கற்பித்தல், வாசிப்பு பயிற்சி உள்ளிட்டவற்றைச் சிறப்பாக செயல்படுத்தி வருவதற்கும், மாணவா் வருகை தொடா்ந்து அதிகரிப்பதற்கும் காரணமான தன்னாா்வலா்களை அவா் பாராட்டினாா்.