புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகேயுள்ள மழையூரில் போதைப்பொருள் விழிப்புணா்வு பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.
கறம்பக்குடி அருகேயுள்ள மழையூா் அரசுத் தொடக்கப் பள்ளியில் இருந்து பேரணியை கறம்பக்குடி வட்டாட்சியா் ராமசாமி தொடங்கி வைத்தாா். பேரணியில், ஊராட்சியில் 100 நாள் வேலைப் பணியாளா்கள் பங்கேற்று போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு, கடைவீதி வழியாக ஊராட்சி அலுவலகம் வரை ஊா்வலமாகச் சென்றனா்.