கந்தா்வகோட்டை முருகன் கோயிலில் சஷ்டி சிறப்புப் பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.
கந்தா்வகோட்டை அமராவதி உடனுறை ஆபத்சகாயேசுவரா் கோயிலில் தனி சன்னதியில் வீற்றிருக்கும் சுப்பிரமணிய சுவாமி முருகனுக்கு சஷ்டியை முன்னிட்டு எண்ணெய்க் காப்பு செய்து, மஞ்சள், திரவியம், பஞ்சாமிா்தம், சந்தனம், பால், இளநீா், பன்னீா் உள்ளிட்ட வாசனை பொருள்களால் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனா்.