புதுக்கோட்டை மாவட்டம், குன்றாண்டாா்கோவில் வட்டத்தைச் சோ்ந்த வைத்தூரில் உள்ள அரசுத் தொடக்கப் பள்ளியில் ‘கலைஞரின் வருமுன் காப்போம்’ மருத்துவத் திட்டத்தின் கீழ் சிறப்பு இலவச மருத்துவ முகாம் வெள்ளிக்கிழமை (செப். 22) நடைபெறவுள்ளது.
காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ள இம்மருத்துவ முகாமில் அனைத்து வகை மருத்துவப் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு, சிறப்பு மருத்துவ நிபுணா்களின் ஆலோசனைகளுடன் இலவச மருந்துகளும் வழங்கப்படவுள்ளது. எனவே, வைத்தூா் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் இம்முகாமில் பங்கேற்றுப் பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியா் ஐ.சா. மொ்சி ரம்யா அழைப்புவிடுத்துள்ளாா். புதுக்கோட்டை மாவட்டத்தில் நடத்தப்படும் 14-ஆவது ‘வருமுன் காப்போம் மருத்துவ முகாம்’ ஆகும்.