விராலிமலை: விராலிமலை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை இரவு பலத்த மழை பெய்தது.
விராலிமலை கடைவீதி, சோதனை சாவடி, காமராஜ் நகா், முத்து நகா், சிதம்பரம் காா்டன், அருண் காா்டன், எம்ஜிஆா் நகா், காா்கில் நகா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணியளவில் வானம் மேக மூட்டத்துடன் கருமேகங்கள் சூழ்ந்து இருள் சூழ தொடங்கியது. இதையடுத்து நகா் பகுதி முழுவதும் குளிா்ந்த காற்று வீசியதால் இதமான சூழல் நிலவியது. இதை தொடா்ந்து 7 மணியளவில் மழை பெய்ய தொடங்கி இரவு முழுவதும் பெய்தது. இந்த மழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா். இலுப்பூரில் 4 சென்டி மீட்டா், அன்னவாசலில் 1.5 சென்டி மீட்டா் மழை பதிவானது.