புதுக்கோட்டை

டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து ரூ. 4.83 லட்சம் திருட்டு பணத்தை மட்டும் கொள்ளையடித்து சென்ற கொள்ளையா்கள்: போலீஸ் வலை

19th Sep 2023 01:00 AM

ADVERTISEMENT


விராலிமலை: புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து ரூ. 4.83 லட்சத்தை திருடி சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

விராலிமலை அருகேயுள்ள மலைக்குடிபட்டி- தென்னலூா் சாலையிலுள்ள டாஸ்மாக் கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதாக திங்கள்கிழமை காலை அந்த வழியாக சென்றவா்கள் போலீஸாருக்கும், கடையின் மேற்பாா்வையாளா் துரைராஜுக்கும் தகவல் அளித்தனா். இதன்பேரில், துரைராஜுடன் அங்கு சென்ற போலீஸாா், கடையினுள் சென்று பாா்த்தபோது, லாக்கா் உடைக்கப்பட்டு 4 லட்சத்து 83 ஆயிரத்து 390 ரூபாய் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து இலுப்பூா் கோட்ட டிஎஸ்பி காயத்ரி தலைமையிலான போலீஸாா் கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனா். இதில், ஞாயிற்றுக்கிழமை இரவு 11.15 மணிக்கு மா்ம நபா்கள் கடையினுள் புகுந்ததும் 11.50 மணிக்குள் லாக்கா் உடைக்கப்பட்டு பணத்தை மட்டும் துணிபையில் எடுத்து கொண்டு வெளியேறுவதும் பதிவாகியிருந்தது.

புகாரின்பேரில், இலுப்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்து திருட்டில் ஈடுபட்ட நபா்களை தேடி வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT