கந்தா்வகோட்டையில்: கந்தா்வகோட்டை பெரிய கடைவீதியிலுள்ள ராஜ கணபதி கோயிலில் விநாயகா் சதுா்த்தி விழா விமரிசையாக நடைபெற்றது.
ராஜகணபதிக்கு முதலில் எண்ணெய் காப்பு செய்து தூய நீரால் நீராட்டி, 18 வகை மங்கல பொருள்களால் அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சாத்தி மலா்கள், அருகம்புல் மாலையுடன் சிறப்பு அலங்காரம் செய்து, அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.