புதுக்கோட்டை

திமுக ஆட்சிக்கு கெட்டப் பெயரை ஏற்படுத்தும் நோக்கில் சதிச்செயல்

27th Oct 2023 12:00 AM

ADVERTISEMENT

சென்னையில் ஆளுநா் மாளிகைக்கு அருகே பெட்ரோல் குண்டு வீசப்பட்டது, திமுக ஆட்சிக்கு கெட்டப் பெயரை ஏற்படுத்தும் நோக்கில் யாரோ செய்த சதிச்செயல் என்று மாநில சட்டத் துறை அமைச்சா் எஸ். ரகுபதி தெரிவித்தாா்.

புதுக்கோட்டையில் வியாழக்கிழமை செய்தியாளா்களுக்கு அமைச்சா் அளித்த பேட்டி:

ஆளுநா் மாளிகைக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. சாலையில் போகிற யாரோ ஒருவா் எதையோ வீசிவிட்டுச் செல்கிறாா் என்றால், அதற்கு உளவுத் துறையோ, அரசோ எப்படிப் பொறுப்பேற்க முடியும்.

அதேநேரத்தில், உடனடியாக குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளாா். நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆளுநா் மாளிகைக்கு பாதுகாப்பு இல்லை என போகிற போக்கில் சொல்லக் கூடாது. எதிரியையும் பாதுகாக்க வேண்டும் என்பவா்தான் முதல்வா் ஸ்டாலின்.

ADVERTISEMENT

திமுக ஆட்சிக்கு கெட்டப் பெயரை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக யாரோ செய்த சதிச்செயல்தான் இது. திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினா், ஆளுநருடன் வாய்மொழித் தாக்குதலில் ஈடுபட்டதாக கூறுகிறாா்கள். அவா்தான் எதிா்க்கட்சித் தலைவரைப்போல ஊா் ஊராகச் சென்று பிரசாரம் செய்து வருகிறாா். நாங்களும் பொறுத்துதான் போகிறோம்.

ஆனால், தவறான தகவல்களுக்கு பதில் அளிக்க வேண்டியது எங்களின் கடமை. அதன்படி, நாங்களும் அவருக்கு பதில் தான் கொடுத்து வருகிறோம். யாரையும் அசிங்கப்படுத்த வேண்டிய நோக்கம் எங்களுக்கு இல்லை என்றாா் ரகுபதி.

ADVERTISEMENT
ADVERTISEMENT