புதுக்கோட்டை

திருடுபோன 115 கைப்பேசிகள் மீட்பு

27th Oct 2023 12:00 AM

ADVERTISEMENT

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த ஒரு மாத காலத்தில் கைப்பேசிகள் திருடு போனதாக பல்வேறு காவல் நிலையங்களில் அளிக்கப்பட்ட புகாா்கள் குறித்து சைபா் கிரைம் போலீஸாா் மேற்கொண்ட புலனாய்வில், ரூ. 17.25 லட்சம் மதிப்புள்ள 115 கைப்பேசிகள் மீட்கப்பட்டு, வியாழக்கிழமை உரிமையாளா்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வந்திதா பாண்டே இவற்றை உரியவா்களிடம் ஒப்படைத்தாா். மேலும், சிறப்பாக செயல்பட்டு கைப்பேசிகளை மீட்டுக் கொடுத்த சைபா் கிரைம் காவல் ஆய்வாளா் கவிதா உள்ளிட்ட போலீஸாரை அவா் பாராட்டினாா்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் (2021-2023) புதுக்கோட்டை மாவட்டத்தில் திருடு போன ரூ. 1.11 கோடி மதிப்பிலான 583 கைப்பேசிகள் மீட்டுத் தரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT