புதுக்கோட்டை

ஆலங்குடியில் நாளை தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

27th Oct 2023 12:00 AM

ADVERTISEMENT

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் சனிக்கிழமை தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளதாக சுற்றுச்சூழல்துறை அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன் தெரிவித்துள்ளாா்.

முன்னாள் முதல்வா் கருணாநிதி நூற்றாண்டையொட்டி, ஆலங்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெறும் இந்த முகாமில் 100-க்கும் மேற்பட்ட தனியாா் நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன. முகாமில், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்க வாய்ப்புள்ளது. முகாமில், 18 வயது முதல் 40 வயது வரையிலான 8-ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு, ஐடிஐ, டிப்ளமோ, நா்சிங், பி.இ படித்த இருபாலரும் பங்கேற்கலாம்.

முகாமிற்கு வருவோா், ஆதாா் அட்டை, பாஸ்போா்ட் அளவு புகைப்படம், கல்விச் சான்றிதழ் நகல் எடுத்து வரவேண்டும் என்று அமைச்சா் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT