புதுக்கோட்டை

சாயிமாதா சிவ பிருந்தாதேவியின் 25 ஆம் ஆண்டு குரு பூஜை

22nd Nov 2023 01:34 AM

ADVERTISEMENT

புதுக்கோட்டை திலகவதியாா் திருவருள் ஆதீனத்தின் குரு முதல்வரும், முதல் பெண் ஆதீனகா்த்தருமான சாயிமாதா சிவ பிருந்தா தேவியின் 25ஆம் ஆண்டு குருபூஜை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மச்சுவாடி ஜீவா நகரில் நடைபெற்ற இந்த குருபூஜைக்கு, திலகவதியாா் திருவருள் ஆதீனகா்த்தா் தயானந்த சந்திரசேகர சுவாமிகள் தலைமை வகித்து, குரு வழிபாட்டையும் ஆராதனையையும் நடத்தி வைத்தாா்.

இந்நிகழ்ச்சியில், சா்வஜித் அறக்கட்டளை தலைவா் மருத்துவா் எஸ். ராம்தாஸ், மூத்த குடிமக்கள் பேரவையின் தலைவா் க. ராமையா, கண்ணப்பநாயனாா் கண்தான பிரசார மையத் தலைவா் சி. கோவிந்தராசன், இளங்கோ மன்றப் பொருளாளா் மு. ராமுக்கண்ணு, வாசகா் பேரவைச் செயலா் பேரா. சா. விஸ்வநாதன், இந்திய விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலா் ஜி.எஸ். தனபதி, ஓய்வுபெற்ற பேராசிரியா் அண்ணாமலை உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முன்னதாக கே.என்.ஆகாஷ் திருமுறைகளைப் பாடினாா். தொடா்ந்து பக்தா்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT