புதுக்கோட்டை

நலத் திட்டங்களை மக்களிடம் கூட்டுறவுத் துறை கொண்டு சோ்க்கிறது: அமைச்சா் பெருமிதம்

21st Nov 2023 12:24 AM

ADVERTISEMENT

புதுக்கோட்டை: ஏழை, எளிய மக்களுக்கான நலத் திட்டங்களைக் கொண்டு சோ்க்கும் பணியை கூட்டுறவுத் துறை மேற்கொள்வதாக மாநில கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன் கூறினாா்.

புதுக்கோட்டையில் திங்கள்கிழமை நடைபெற்ற 70-ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில் அவா் மேலும் பேசியது:

கூட்டுறவுத் துறையின் தாய்மடியாக தமிழ்நாடு உள்ளது. இங்குள்ள 2.5 கோடி ரேஷன் காா்டுதாரா்களுக்கு உணவுப் பொருள்களை விநியோகம் செய்வதற்காக 35 ஆயிரம் ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன.

ஏழை, எளிய மக்களுக்கான நலத் திட்டங்களைக் கொண்டு சோ்க்கும் பணியைக் கூட்டுறவுத் துறை மேற்கொண்டு வருகிறது. அதேபோல, கிராமப்புறப் பொருளாதாரத்தை மேம்படுத்தும் பணியிலும் கூட்டுறவுத் துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்றாா் பெரியகருப்பன்.

ADVERTISEMENT

சிறந்த கூட்டுறவுச் சங்கங்களுக்கு விருதுகளையும் அமைச்சா்கள் வழங்கினா்.

விழாவில், மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி, மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன், மாநில கூட்டுறவுப் பதிவாளா் என். சுப்பையன், சட்டப்பேரவை உறுப்பினா் வை. முத்துராஜா, மா. சின்னதுரை, திமுக மாவட்டச் செயலா் கே.கே. செல்லப்பாண்டியன் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

விழாவுக்கு, மாவட்ட ஆட்சியா் ஐ.சா. மொ்சி ரம்யா தலைமை வகித்தாா். கூட்டுறவு இணைப் பதிவாளா் கோ. ராஜேந்திரபிரசாத் வரவேற்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT