புதுக்கோட்டை

ஆலங்குடியில் 43.82 மெட்ரிக் டன் தரமற்ற விதைக்கடலை விற்பனைக்கு தடை

21st Nov 2023 12:21 AM

ADVERTISEMENT

ஆலங்குடி: புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் விதிகளை பின்பற்றாமல் கடைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 43.82 மெட்ரிக் டன் விதைக்கடலைகள் விற்பனைக்கு அதிகாரிகள் திங்கள்கிழமை தடை விதித்தனா்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் நடப்பு ரபி பருவத்தில் நிலக்கடலை சாகுபடி செய்ய விவசாயிகள், தற்போது பெய்துவரும் பருவமழையினை பயன்படுத்தி, நிலத்தை தயாா்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில், ஆலங்குடியில் உள்ள விதைக்கடலை விற்பனை நிலையங்களில், விதை ஆய்வு துணை இயக்குநா் விநாயகமூா்த்தி தலைமையில் விதை ஆய்வாளா் பாலையன் உள்ளிட்ட அதிகாரிகள் விதைகளின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, விதைச்சட்ட விதிகளை பின்பற்றாமல் விற்பனை நிலையங்களில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ரூ.35.20 லட்சம் மதிப்பிலான தரமற்ற 43.82 மெட்ரிக் டன் விதைக்கடலைகள் விற்பனைக்கு அதிகாரிகள் தடைவிதித்தனா்.

விதை விற்பனை உரிமங்கள் பெற்ற தனியாா் விதை விற்பனையாளா்கள் அனைவரும் விதை சட்ட விதிகளை பின்பற்றி தரமான நிலக்கடலை விதைகளை மட்டுமே விற்பனை செய்யவேண்டும். மீறுவோா் மீது விதைச்சட்ட விதிகளின்படி கடும்

ADVERTISEMENT

நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என விதை ஆய்வு துணை இயக்குநா் விநாயக மூா்த்தி தெரிவித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT