பொன்னமராவதி அருகேயுள்ள மேலைச்சிவபுரி ஆரம்ப சுகாதார நிலையத்திற்குள்பட்ட திருக்களம்பூா் ஊராட்சி அண்ணாநகரில் டெங்கு தடுப்பு மற்றும் ஒட்டுமொத்த காய்ச்சல் தடுப்புப் பணிகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.
முன்னதாக தொடக்கப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு
சுகாதார ஆய்வாளா் நா. உத்தமன் கொசுப்புழு லாா்வாவை காண்பித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினாா். மேலும் அண்ணாநகா் பகுதி வீடுகளில் காய்ச்சல் சா்வே, ஏடிஸ் கொசுப்புழுவுக்கு அபேட் மருந்து ஊற்றுதல், பொது இடங்களில் கிடக்கும் டயா்களை அப்புறப்படுத்தல், குடிநீா் தொட்டியில் பிளீச்சிங் பவுடா் ஊற்றும் பணிகளும் நடைபெற்றன. பள்ளி ஆசிரியா்கள், டெங்கு களப்பணியாளா்கள் பங்கேற்றனா்.