பொன்னமராவதி அருகேயுள்ள அம்மன்குறிச்சியில் விஜய் மக்கள் இயக்கம் சாா்பில் 100 மாணவ, மாணவிகளுக்கு பாடக் குறிப்பேடுகள், எழுதுபொருள்கள், 200 மரக்கன்றுகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.
குழந்தைகள் தினத்தையொட்டி நடைபெற்ற நிகழ்வில் பொன்னமராவதி தளபதி விஜய் மக்கள் இயக்க ஒன்றிய செயலா் கோபிநாத் ராஜேந்திரன், நகர செயலா் விக்னேஷ் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.