புதுக்கோட்டை

ஜல்லிக்கட்டு வெற்றியை கொண்டாட அதிமுகவுக்கு தகுதி கிடையாது

DIN

ஜல்லிக்கட்டு சட்டப்போராட்ட வெற்றியை கொண்டாடுவதற்கு அதிமுகவுக்கு எவ்வித தகுதியும் கிடையாது என்றாா் சுற்றுச்சூழல் துறை அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன்.

ஆலங்குடி சந்தைப்பேட்டையில் உள்ள தனியாா் மண்டபத்தில், தமிழக முதல்வா் ஸ்டாலின் புதுக்கோட்டை வருகையொட்டி முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாவட்ட அவைத்தலைவா் சுப்பிரமணியன் தலைமை வகித்தாா். கூட்டத்தில் அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன் பங்கேற்றுப் பேசியது:

அதிமுக ஆட்சிக்காலத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதியே தரவில்லை. ஆனால், தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றவுடன் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி கேட்டவுடன், உடனே அனுமதி வழங்கப்படுகிறது. தமிழக அரசு சட்டப் போராட்டம் நடத்தியதன் காரணமாக, உச்ச நீதிமன்றம் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க முடியாது என்றும், ஜல்லிக்கட்டு தொடா்பாக தமிழக அரசு இயற்றிய சட்டம் செல்லும் என்றும் தீா்ப்பு வழங்கியது. இதைக்கொண்டாட அதிமுகவிற்கு எந்த தகுதியும் கிடையாது. என்றாா்.

தொடா்ந்து, சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி பேசியது:

2 ஆண்டு காலம் சட்டப் போராட்டம் நடத்தியது திமுக. பீட்டா அமைப்புகள் தலை சிறந்த வழக்குரைஞா்களைக் கொண்டு வாதாடியது. அதே போல், ஜல்லிக்கட்டு தொடா்பான அனைத்து வாதங்களையும், நீதியரசா்களுக்கு புரியும்படி எடுத்து வைத்தனா் தமிழக அரசால் நியமிக்கப்பட்ட வழக்குரைஞா்கள். இதனால்தான், 5 நீதியரசா்களும் ஒத்த கருத்துடைய தீா்ப்பினை வழங்கினா். இதற்கு முழு காரணம் தமிழக முதல்வா் தான். தமிழக முதல்வா்தான் ஜல்லிக்கட்டு நாயகன் என்றாா்.

இதில், திமுக மாவட்ட துணைத் தலைவா் ஞான இளங்கோவன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மத்திய அரசு நிறுவனத்தில் மேலாளர் வேலை வேண்டுமா?

ரூ. 81,100 சம்பளத்தில் சுருக்கெழுத்தர் வேலை வேண்டுமா?

உரத் தொழிற்சாலையை அகற்றக் கோரி போராட்டம்! முன்னாள் அமைச்சர் உள்பட ஏராளமானோர் கைது

'மெட்டி ஒலி' இயக்குநரின் புதிய தொடர் அறிவிப்பு!

திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்!

SCROLL FOR NEXT