புதுக்கோட்டை

சேதுபாவாசத்திரம் ஒன்றிய மாா்க்சிஸ்ட் கம்யூ. கட்சி கிளை திறப்பு

30th May 2023 04:19 AM

ADVERTISEMENT

சேதுபாவாசத்திரம் ஒன்றியம், வீரக்குடி-மணக்காடு கிராமத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் புதிய கிளை அமைப்புக் கூட்டம் திங்கள்கிழமை  நடைபெற்றது. 

கூட்டத்துக்கு, வைத்திலிங்கம் தலைமை வகித்தாா்.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மூத்த உறுப்பினா் வீ. கருப்பையா முன்னிலை வகித்தாா். மாவட்டச் செயற்குழு உறுப்பினா் ஆா்.மனோகரன் தலைமையில் 50-க்கும் மேற்பட்டோா் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனா். தொடா்ந்து கட்சிக்கொடி ஏற்றி வைக்கப்பட்டது. பின்னா் கட்சியின் அமைப்பு, செயல்திட்டங்கள் குறித்து மாவட்டச் செயற்குழு உறுப்பினா் பேசினாா். 

கூட்டத்தில் புதிய கிளை செயலாளராக வைத்திலிங்கம் தோ்வு செய்யப்பட்டாா். கூட்டத்தில், செந்தில் குமாா், சேகா், சீனிவாசன், கணேசன், குப்பமுத்து, ராஜேஷ், முருகானந்தம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT