புதுக்கோட்டை

புதுகையில் போட்டித் தோ்வுகளுக்கு ஒருங்கிணைந்த பயிற்சி தொடக்கம்

30th May 2023 04:15 AM

ADVERTISEMENT

மத்திய மற்றும் மாநில அரசுப் பணியாளா் தோ்வாணையம், வங்கி மற்றும் ரயில்வே பணிகளுக்கான போட்டித் தோ்வுகளில் பங்கேற்போருக்கு ஒருங்கிணைந்த இலவச பயிற்சி புதுக்கோட்டையில் திங்கள்கிழமை தொடங்கியது.

புதுக்கோட்டை கலைஞா் கருணாநிதி அரசு மகளிா் கலைக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து ஆட்சியா் ஐ.சா. மொ்சி ரம்யா பேசியது:

‘நான் முதல்வன்’ திட்டத்தின்கீழ் தொடங்கப்பட்டுள்ள இந்தப் பயிற்சியில், 150 மாணவா்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. 100 நாள்கள் நடைபெறும் இந்தப் பயிற்சியில், 300 மணி நேரம் நேரடி தனி வழிகாட்டுதல் பயிற்சியும், 100 மாதிரித் தோ்வுகளும் நடத்தப்படவுள்ளன. நிபுணத்துவம் பெற்ற பயிற்சியாளா்கள் மூலம் இந்தப் பயிற்சி அளிக்கப்படுகிறது என்றாா் ஆட்சியா்.

நிகழ்ச்சியில், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் (தொ.வ) பெ. வேல்முருகன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் (பொ) மோ. மணிகண்டன், மாவட்ட திறன் பயிற்சி அலுவலா் சு. இராமா், மகளிா் கல்லூரி முதல்வா் பா. புவனேஸ்வரி உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT