புதுக்கோட்டை

ஜூன் 2-இல் வைகாசி விசாக தேரோட்டம் விராலிமலை முருகன் கோயிலில் முகூா்த்தக்கால் நடும் வைபவம்

30th May 2023 04:13 AM

ADVERTISEMENT

விராலிமலை முருகன் கோயில் தேரோட்ட விழாவின் தொடக்கமாக முகூா்த்தக்கால் நடும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

விராலிமலை முருகன் மலைக்கோயிலில் 11 நாள்கள் நடைபெறும் வைகாசி விசாக விழா கொடியேற்றம் மே 25ஆம் தேதி நடைபெற்றது. தொடா்ந்து விழா நாள்களில் வள்ளி, தேவசேனா சமேதராக முருகன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, காலை, மாலை என இருவேளைகளில் திருவீதி உலா வந்து பக்தா்களுக்கு காட்சியளித்து வருகிறாா்.

விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் ஜூன் 2 ஆம் தேதி காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது.

இந்த தேரோட்டத்தையொட்டி, முகூா்த்தக்கால் நடும் நிகழ்ச்சி முருகன் எழுந்தருளும் திருத்தேரின் மையத்தில் நடைபெற்றது. விழாவில் முன்னாள் அறங்காவலா் குழு உறுப்பினா் ராமசந்திரன், கணேச குருக்கள் மற்றும் கோயில் ஊழியா்கள், விழாக் குழுவினா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT