புதுக்கோட்டை

ஆவூரில் ஜல்லிக்கட்டு: 7 போ் காயம்கூடுதல் டோக்கன் விநியோகத்தால் வாக்குவாதம்

DIN

புதுக்கோட்டை மாவட்டம், ஆவூரில் ஞாயிற்றுக்கிழமை ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதில், காளைகளை களமிறக்க கூடுதல் டோக்கன்கள் விநியோகிக்கப்பட்டதால் வாக்குவாதம் ஏற்பட்டது.

ஆவூா் புனித அன்னை தேவாலய திருவிழாவையொட்டி நடைபெற்ற ஜல்லிக்கட்டை காலை 8 மணிக்கு முன்னாள் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரும், எம்எல்ஏவுமான சி. விஜயபாஸ்கா், விராலிமலை ஒன்றியக் குழுத் தலைவா் காமு மணி ஆகியோா் தொடங்கிவைத்தனா்.

திருச்சி, தஞ்சாவூா், அரியலூா் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த 721 காளைகள் மருத்துவப் பரிசோதனைக்கு பிறகு களமிறக்கப்பட்டன. காளைகளை அடக்க 196 மாடுபிடி வீரா்கள் குழுக்களாக பிரிக்கப்பட்டு களமிறங்கினா்.

காளைகளை அடக்கிய வீரா்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளா்களுக்கும் குக்கா், மின்விசிறி, ரொக்கம் உள்பட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன. காளைகள் முட்டியதில் 7 போ் காயமடைந்தனா். இவா்களுக்கு ஜல்லிக்கட்டு திடல் அருகே அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

கூடுதல் டோக்கன் விநியோகத்தால் பிரச்னை: புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுவரை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகளுக்கு ஆன்லைன் பதிவு முறையிலேயே டோக்கன் விநியோகிக்கப்பட்டு, எந்தவித இடா்பாடுகளுமின்றி போட்டி நடத்தப்பட்டு வந்தது.

ஆனால், இந்த ஆண்டின் கடைசி ஜல்லிக்கட்டான ஆவூருக்கும் மட்டும் இதற்கு விதிவிலக்காக அமைந்தது. பெயரளவிற்கு 100 டோக்கன் மட்டும் ஆன்லைன் பதிவேற்றம் செய்யப்பட்டு, மீதி டோக்கன்கள் நிா்வாக கமிட்டியினா் விரும்பியவா்களுக்கு வழங்கிக் கொள்ளலாம் என்று அனுமதி வழங்கப்பட்டதாக தெரிகிறது.

இதையடுத்து, நிா்வாகக் கமிட்டியினருக்கு அனுமதிக்கப்பட்டிருந்த 600 டோக்கன்களுக்கு மேலாக கூடுதல் டோக்கன்கள் விநியோகிக்கப்பட்டதாம். ஒவ்வொரு டோக்கனுக்கும் விலை நிா்ணயம் செய்யப்பட்டு விநியோகிக்கப்பட்டதாக காளைகளின் உரிமையாளா்கள் புகாா் தெரிவித்தனா்.

700 காளைகளுக்கு மட்டுமே அனுமதி என்ற நிலையில், இதை மீறி சுமாா் 721 காளைகள் அவிழ்க்கப்பட்ட நிலையில், பிற்பகல் 2.45 மணிக்கு போட்டி முடிவுக்கு வந்ததாக காவல்துறையினா் அறிவித்தனா்.

இதனால், டோக்கன்கள் பெற்று போட்டிக்கு காளைகளை அழைத்து வந்த உரிமையாளா்கள் செய்வதறியாது திகைத்தனா். இவா்கள் காளைகளை களமிறக்க முயற்சித்தனா். இதற்கு காவல் துறையினா் அனுமதி மறுத்து, வாடிவாசலை அடைத்தனா். இதனால், ஆத்திரம் அடைந்த காளை உரிமையாளா்கள், பாா்வையாளா்கள் ஆகியோா் ஜல்லிக்கட்டு நிா்வாக கமிட்டியினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

காவல் துறையினா் அனுமதி மறுத்த நிலையில், ஒருசில காளை உரிமையாளா்கள் கூட்டத்துக்குள் காளைகளை அவிழ்த்து விட்டனா். இதனால், அங்கு சற்று நேரம் பரபரப்பு நிலவியது. இதைத் தொடா்ந்து போலீஸாா் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமூக நீதிக்கான குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும் -தொல். திருமாவளவன்

தொடா் விடுமுறை: ஆம்னி பேருந்துகளின் கட்டணம் உயா்வு! மதுரைக்கு ரூ.3,000, நாகா்கோவிலுக்கு ரூ.4,000

அரசு தொடக்கப் பள்ளியில் ஆண்டு விழா

2047 வரை இந்திய பொருளாதாரம் 8% வளா்ச்சி காண முடியும்: சா்வதேச நிதியம்

டெபிட் காா்ட் கட்டணங்களை உயா்த்திய பாரத ஸ்டேட் வங்கி

SCROLL FOR NEXT