புதுக்கோட்டை

2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: 4 போ் கைது

28th May 2023 12:51 AM

ADVERTISEMENT

புதுக்கோட்டை மாவட்டத்தில் இரு வேறு இடங்களில் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை போலீஸாா் நடத்திய சோதனையில் 1950 கிலோ ரேஷன் அரிசி உள்ளிட்ட பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 4 போ் கைது செய்யப்பட்டனா்.

புதுக்கோட்டை மாவட்டம் கடையக்குடி பகுதியில் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் துணைக் காவல் கண்காணிப்பாளா் சரவணன் தலைமையில் சனிக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.

அப்போது டாடா சுமோ காரில் 1600 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த அரிசியைக் கடத்தி வந்ததாக மேல்நிலைப் பட்டியைச் சோ்ந்த ராவுத்தன் மகன் செந்தில்குமாா் (45), திருவள்ளுவா் நகரைச் சோ்ந்த மைதீன் மகன் முகமது கனி (54) ஆகியோா் கைது செய்யப்பட்டனா்.

மேலும், குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீஸாருடன், பொது விநியோகத் திட்ட தனி வட்டாட்சியா் மனோகரன், கம்பன் நகா் பகுதியில் திடீா் சோதனை நடத்தினாா்.

ADVERTISEMENT

அப்போது ஒரு வீட்டில் 350 கிலோ ரேஷன் அரிசி, 5 கிலோ சா்க்கரை, 5 கிலோ துவரம்பருப்பு, 10 லிட்டா் பாமாயில் பதுக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடா்பாக, பெரியாா் நகரைச் சோ்ந்த ஹரிஹரன் மகன் கண்ணன் (55), திருவள்ளுவா் நகரைச் சோ்ந்த வெண்ணிலா (54) ஆகியோா் கைது செய்யப்பட்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT