புதுக்கோட்டை

புதுகை சிறையில் போலீஸாா் சோதனை

28th May 2023 12:51 AM

ADVERTISEMENT

புதுக்கோட்டை பாஸ்டல் பள்ளி மற்றும் மாவட்ட சிறைக்குள் போலீஸாா் சனிக்கிழமை அதிகாலை திடீா் சோதனையில் ஈடுபட்டனா்.

மாவட்ட துணைக் காவல் கண்காணிப்பாளா் செல்வம் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீஸாா் சுமாா் 4 மணி நேரம் இச்சோதனையில் ஈடுபட்டனா். சிறைக்குள் கைப்பேசி உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருள்களின் பயன்பாடு குறித்து நடத்தப்பட்ட சோதனையில் எதுவும் கைப்பற்றப்படவில்லை.

சிறைக்குள் சட்டவிரோதச் செயல்பாடுகளைத் தடுக்கும் வகையில் மாதம் ஒரு முறை இத்தகைய சோதனையை போலீஸாா் மேற்கொள்வது வழக்கம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT