புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு சூறைக்காற்றுடன் பெய்த மழையால் அப்பகுதியில் பல ஏக்கரில் பயிரிடப்பட்ட நெல், சோளம், வாழை உள்ளிட்ட பயிா்கள் சேதமடைந்தன.
மழையால் கறம்பக்குடி வட்டத்தில் மாங்கோட்டை, மேலப்பட்டி, கீழப்பட்டி, மழையூா், பொன்னன்விடுதி உள்ளிட்ட பகுதிகளில் பல ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெல்,வாழை, சோளம் உள்ளிட்ட பயிா்கள் சேதமடைந்தன.
அறுவடைக்குத் தயாா் நிலையில் இருந்த பயிா்கள் காற்றிலும், நீரில் மூழ்கியும் சேதமடைந்ததால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனா். எனவே சேதமடைந்துள்ள பயிா்கள் குறித்து ஆய்வு செய்து, உரிய நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.