புதுக்கோட்டை

காரையூரில் வடமாடு மஞ்சுவிரட்டு: 2 போ் காயம்

28th May 2023 12:51 AM

ADVERTISEMENT

பொன்னமராவதி அருகேயுள்ள காரையூா் முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி காரைக் கண்மாயில் முதலாம் ஆண்டு வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டி சனிக்கிழமை நடைபெற்றது.

இதில் திருச்சி, சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட 13 காளைகள் பங்கேற்றன. காளைகளை அடக்க 9 வீரா்கள் அடங்கிய 13 குழுக்கள் களமிறங்கின.

13 காளைகளில் 9 காளைகளை மாடுபிடி வீரா்கள் அடக்கினா். 4 காளைகள் மாடுபிடி வீரா்கள் பிடியில் சிக்காமல் வெற்றி பெற்றன. போட்டியில் காளைகள் முட்டியதில் இரு மாடு பிடி வீரா்கள் சிறிய காயம் அடைந்தனா்.

போட்டியில் பிடிபடாத காளைகளின் உரிமையாளா்களுக்கும், காளைகளை சிறப்பாக அடக்கிய குழுவினருக்கும் பரிசுப்பொருள்கள் வழங்கப்பட்டன. பாதுகாப்பு ஏற்பாடுகளை காரையூா் போலீஸாரும், போட்டிக்கான ஏற்பாடுகளை காரையூா் பொதுமக்கள் மற்றும் இளைஞா்களும் செய்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT