புதுக்கோட்டை

பொன்னமராவதி பகுதிகளில் டெங்கு தடுப்புக் களப்பணி

28th May 2023 12:52 AM

ADVERTISEMENT

பொன்னமராவதி பேரூராட்சி வாா்டுப் பகுதிகளில் டெங்கு தடுப்பு களப்பணி சனிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்வில் பொன்னமராவதி பேரூராட்சியில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான பேருந்து நிலையம், அரசு பாப்பாயி மருத்துவமனை, அரசு ஆரம்ப சுகாதார நிலையம், காவல் நிலையம், சாா்பதிவாளா் அலுவலகம் மற்றும் முக்கிய வீதிகளில் முதிா் கொசு ஒழிப்புப் புகை மருந்து அடிக்கப்பட்டது. மேலும் பேரூராட்சிக்குள்பட்ட வாா்டு பகுதிகளில் வீடு தோறும் டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக நிலவேம்பு குடிநீா் வழங்கப்பட்டது. பேரூராட்சி செயல் அலுவலா் மு.செ. கணேசன் மற்றும் டெங்கு களப்பணியாளா்கள் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT