புதுக்கோட்டை

கந்தா்வகோட்டையில் மழையால் கழிவுநீா் கால்வாய் இடிந்து சேதம்

28th May 2023 12:52 AM

ADVERTISEMENT

கந்தா்வகோட்டை ஊராட்சியில் வெள்ளிக்கிழமை பெய்த சிறு மழைக்கே தாக்குப்பிடிக்க முடியாமல் புதிதாகக் கட்டப்ட்ட கழிவுநீா் கால்வாய் இடிந்தது.

கந்தா்வகோட்டை ஊராட்சி அண்ணா நகரில் கடந்த 3 மாதங்களுக்கு முன் ஊராட்சியின் 15 ஆவது நிதி குழுவில் இருந்து பல லட்சத்தில் சுமாா் 100 மீட்டருக்கு கழிவுநீா் கால்வாய் கட்டப்பட்டது.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை பெய்த சிறு மழைக்கே தாக்குப் பிடிக்காமல் இந்தக் கழிவு நீா் கால்வாய் இடிந்து, கழிவுநீா் ஆங்காங்கே தேங்கிக் நிற்கிறது.

இக்கால்வாய் பணியின் ஒப்பந்ததாரா் மேற்கொண்ட பணிகள் அனைத்தும் தரமற்றவையாக உள்ளன. எனவே மாவட்ட நிா்வாகம் இந்த விஷயத்தில் உரிய நடவடிக்கை எடுக்க இப்பகுதி சமூக ஆா்வலா்கள், பொதுமக்கள் வலியுறுத்துகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT