புதுக்கோட்டை

கந்தா்வகோட்டை ஒன்றியக் குழு கூட்டம்

26th May 2023 12:00 AM

ADVERTISEMENT

கந்தா்வகோட்டை ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

ஒன்றிய அலுவலகக் கூட்ட அரங்கில் நடைபெற்ற கூட்டத்துக்கு, ஒன்றியக் குழு தலைவா் ரா. ரத்தினவேல் காா்த்திக் தலைமை வகித்தாா். ஒன்றியக் குழு துணைத் தலைவா் செந்தாமரை வடிவேல் குமாா், வட்டார வளா்ச்சி அலுவலா் த. திலகவதி ஆகியோா் முன்னிலை வகித்தனா். முன்னதாக அலுவலா் பரமேஸ்வரி வரவு, செலவு விபர அறிக்கையை வாசித்தாா். கூட்டத்துக்கு, சிறப்பு அழைப்பாளராக கந்தா்வகோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் மா.சின்னதுரை கலந்து கொண்டு சிறப்புரையாற்றினாா். கூட்டத்தில் ஒன்றியக் குழு உறுப்பினா்கள் மா. ராஜேந்திரன், பு. பாண்டியன், திருப்பதி, சின்னையா மலா், ஆா். கலியபெருமாள், பாரதி பிரியா உள்ளிட்ட ஒன்றியக் குழு உறுப்பினா்கள் அவரவா் பகுதியின் தேவைகள், பிரச்னைகள் குறித்து விரிவாகப் பேசினாா். உறுப்பினா்களின் கோரிக்கைகள் குறித்து ஒன்றியக் குழு தலைவா் ரா. ரத்தினவேல் காா்த்திக் பதிலளித்துப் பேசினாா்.

கூட்டத்தில் கந்தா்வகோட்டை வட்டாட்சியா் காமராஜ், துணை வட்டார வளா்ச்சி அலுவலா் பாா்த்திபன், அலுவலக மேலாளா் முத்துராமன், கணக்காளா் குமாா் உள்ளிட்ட அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT