புதுக்கோட்டை

பிசானத்தூா் ஸ்ரீ திரெளபதியம்மன் கோயில் தீமிதி திருவிழா

24th May 2023 03:33 AM

ADVERTISEMENT

கந்தா்வகோட்டை ஊராட்சி ஒன்றியம், பிசானத்தூா் கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ திரௌபதியம்மன் கோயில் தீமிதி திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தீமிதிவிழாவையொட்டி, கோயில் திடலில் சுமாா் 10 டன் எடை கொண்ட புளியமரம், மாமரம், நாட்டு மரங்களைக் கொண்டு கோயிலிலிருந்து எடுத்து வந்த அக்னி சட்டி நெருப்பை வைத்து தீ மூட்டினாா். தீக்குழியில் இறங்க வேண்டிக் கொண்ட பக்தா்கள் கந்தா்வகோட்டை - தஞ்சை சாலையிலிருக்கும் அடைக்கலம் சாவடிகுளத்திலிருந்து கரகம் எடுத்துவந்தபடி தீக்குழியில் இறங்கினாா். முன்னதாக, திங்கள்கிழமை இரவு இன்னிசை கச்சேரி, வாணவேடிக்கை நடைபெற்றது. தீமிதிவிழாவைத் தொடா்ந்து, அன்னதானம் வழங்கப்பட்டது. பாதுகாப்புப் பணியில் கந்தா்வகோட்டை காவல்துறையினா் ஈடுபட்டனா். மேலும் 108 அவசர ஊா்தி, தீயணைப்புப் படை வீரா்கள் முன்னெச்சரிக்கை பணியில் ஈடுபட்டிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT