கீரமங்கலம் அருகேயுள்ள செரியலூா் கரம்பக்காடு முத்துமாரியம்மன் கோயில் தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
செரியலூா் கரம்பக்காடு முத்துமாரியம்மன் கோயில் திருவிழா கடந்த வாரம் காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. தொடா்ந்து, கோயிலில் தினசரி மண்டகப்படிதாரா்கள் சாா்பில், அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், அம்மன் வீதியுலாவும் நடைபெற்று வந்தன.
திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் திங்கள்கிழமை மாலை நடைபெற்றது. இதையொட்டி, அலங்கரிக்கப்பட்ட தேரில், சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த அம்மனை எழுந்தருள செய்து, ஏராளமானோா் பக்தி பரவசத்தோடு தேரை வடம்பிடித்து இழுத்து வந்தனா்.
திருவிழாவில், செரியலூா், கரம்பக்காடு, கீரமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் கலந்து கொண்டனா். கீரமங்கலம் போலீஸாா் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனா்.