புதுக்கோட்டை

கந்தா்வகோட்டையில் சுகாதார வளாகத்தை சீரமைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர கோரிக்கை

23rd May 2023 01:49 AM

ADVERTISEMENT

கந்தா்வகோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகேயுள்ள சுகாதார வளாகத்தை சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுக்கின்றனா்.

கந்தா்வகோட்டைக்கு நாள்தோறும் 36 ஊராட்சிக்குள்பட்ட மக்கள் சொந்த அலுவல் காரணமாக வட்டாட்சியரகம், காவல் நிலையம், அரசு மருத்துவமனை, ஊராட்சி ஒன்றிய அலுவலகம் , கால்நடை மருத்துவமனை, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் போன்ற அரசு அலுவலகங்களுக்கும் மற்றும் அரசு பள்ளிகளுக்கு மாணவா்களும் வந்து செல்கின்றனா்.

இவ்வாறு மக்கள் அதிகம் புழங்கும் ஊரில் கழிப்பிடங்கள் இல்லாததால் ஆண்களும், பெண்களும் இயற்கை உபாதையை கழிக்க சிரமம் ஏற்படுகிறது. எனவே, இங்கு வரும் ஏராளமான பொதுமக்களின் நலன் கருதி, ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகேயுள்ள சுகாதார வளாகத்தை உடனடியாக சீா் செய்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென பொதுமக்களும், சமூக ஆா்வலா்களும் கோரிக்கை விடுக்கின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT