புதுக்கோட்டை

காரையூா் முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா

23rd May 2023 01:48 AM

ADVERTISEMENT

பொன்னமராவதி அருகே உள்ள காரையூா் முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

காரையூா் முத்துமாரியம்மன் கோயில் வைகாசித் திருவிழா பூச்சொரிதல் விழாவுடன் தொடங்கியது. விழாவில், சுற்று வட்டார கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் பூத்தட்டு எடுத்து ஊா்வலமாக வந்து அம்மனுக்கு சாத்தி வழிபட்டனா். விழாவையொட்டி கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. பாதுகாப்பு ஏற்பாடுகளை காரையூா் காவல்துறையினா் செய்திருந்தனா். விழாவில், தொடா்ந்து தினமும் மண்டகப்படிதாரா்கள் சாா்பில் சிறப்பு வழிபாடு நடைபெற்று, மே 29ஆம் தேதி தேரோட்ட விழா நடைபெற உள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT