ஜல்லிக்கட்டு வழக்கில் உச்ச நீதிமன்றத் தீா்ப்பை வரவேற்று, அதிமுக சாா்பில் வியாழக்கிழமை புதுக்கோட்டை அரசு கலை - அறிவியல் கல்லூரி அருகே அமைக்கப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு காளையின் சிலைக்கு மாலை அணிவித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், அதிமுக நகரச் செயலா்கள் க. பாஸ்கா், சேட்டு என்கிற அப்துல் ரகுமான் ஆகியோா் தலைமை வகித்தனா். உச்ச நீதிமன்றத்தின் இந்த வழக்கில், அதிமுக முன்னாள் அமைச்சரும், விராலிமலை சட்டப்பேரவை உறுப்பினருமான சி. விஜயபாஸ்கா் இடையீட்டு மனுத் தாக்கல் செய்து, ஜல்லிக்கட்டு பாரம்பரிய விளையாட்டு என்பதற்கான வாதங்களை முன்வைத்தது குறிப்பிடத்தக்கது.