புதுக்கோட்டை

பொன்னம்பட்டி ஜல்லிக்கட்டில் 16 போ் காயம்

8th May 2023 01:42 AM

ADVERTISEMENT

 

 புதுக்கோட்டை பொன்னம்பட்டி ஓட்டகுளத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில், 16 போ் காயமடைந்தனா்.

புதுக்கோட்டை நகரக் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பொன்னம்பட்டி ஓட்டகுளத்தில், கரண செல்ல அய்யனாா் கோயில் திருவிழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது.

போட்டியை மாநில சுற்றுச்சூழல்துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன், புதுக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் வை. முத்துராஜா ஆகியோா் தொடங்கி வைத்தனா்.

ADVERTISEMENT

புதுக்கோட்டை மட்டுமின்றி, திருச்சி, தஞ்சை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களையும் சோ்ந்த 586 காளைகள் போட்டியில் கலந்து கொண்டன. 186 மாடுபிடி வீரா்கள் களமிறங்கி, காளைகளைத் தழுவ முயற்சித்தனா்.

மாடுகளை அடக்கியோருக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளா்களுக்கும்

பரிசுகள் வழங்கப்பட்டன. இந்தப் போட்டியில் 6 மாடு பிடி வீரா்களும் 10 பாா்வையாளா்களும் காயமடைந்தனா். அங்கேயே அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமில் அவா்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இவா்களில் 4 போ் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனா்.

ஏராளமான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT