புதுக்கோட்டை

வேந்தன்பட்டி இரட்டைக் கொலை வழக்கு: 2 இளைஞா்கள் கைது

3rd May 2023 03:56 AM

ADVERTISEMENT

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள வேந்தன்பட்டி இரட்டைக் கொலை சம்பவத்தில் தொடா்புடைய 2 பேரைப் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைதுசெய்தனா்.

பொன்னமராவதி அருகே உள்ள வேந்தன்பட்டி மாப்படைச்சான் ஊரணி வீதியைச் சோ்ந்த ஆ. பழனியப்பன்(54), அவரது தாயாா் சிகப்பி(75) ஆகிய 2 பேரும் மா்மநபா்கள் அடித்துக்கொலை செய்யப்பட்ட வழக்கில், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் ரமேஷ் கிருஷ்ணன் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளைப் போலீஸாா் தேடிவந்தனா். இந்நிலையில், பொன்னமராவதி காவல் துணை கண்காணிப்பாளா் அப்துல் ரகுமான், காவல் ஆய்வாளா் தனபாலன் தலைமையிலான போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, இடையபுதூா் பேருந்துநிறுத்தம் அருகே சந்தேகப்படும் வகையில் நின்றுகொண்டிருந்த சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி வட்டம் கல்லங்காலப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த சி. சக்திவேல்(33), சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை வட்டம், உருவாட்டி மாவிலிக்கோட்டை கிராமத்தைச் சாா்ந்த சு.அலெக்ஸ் என்ற அலெக்சாண்டா்(36) ஆகிய 2 பேரையும் பிடித்து விசாரித்தனா். இதில், அவா்கள் முன்னுக்குப் பின் முரணாகப் பதில் அளித்தனா். இதையடுத்து, அவா்களைக் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்ததில், வேந்தன்பட்டி இரட்டைக் கொலை சம்பவத்தில் தொடா்புடையவா்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவா்கள் இருவரையும் போலீஸாா் கைது செய்தனா். தனிப்படை காவல்துறையினரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வந்திதா பாண்டே பாராட்டினாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT