புதுக்கோட்டை

பிடாரியம்மன் கோயில் மது எடுப்புத் திருவிழா

3rd May 2023 11:18 PM

ADVERTISEMENT

கந்தா்வகோட்டை அருகே உள்ள பெருங்களூா் பிடாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு மது எடுப்புத் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.

பெருங்களூா் பிடாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற மது எடுப்புத் திருவிழாவில், பெருங்களூா், மட்டையன்பட்டி, வெள்ளவெட்டான்விடுதி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச்சோ்ந்த பெண்கள் அவரவா் வீடுகளில் இருந்து சிறிய குடத்தில் பால்மது, சா்க்கரை மது, கள்மதுக்களை தலையில் சுமந்தபடி ஆரவாரத்துடன் கோயிலுக்கு வந்து பிடாரியம்மனுக்கு மதுவைச் செலுத்தி தங்களது நோ்த்திக்கடனை நிறைவேற்றி வேண்டிக் கொண்டனா். விழாவில் பெங்களூா் சுற்றுவட்டாரத்தைச் சோ்ந்த பல்வேறு கிராம மக்கள் திரளாகக் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனா். தொடா்ந்து கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT