புதுக்கோட்டை

இந்திய கம்யூ. திருமயம் ஒன்றிய மாநாடு

3rd May 2023 03:58 AM

ADVERTISEMENT

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருமயம் ஒன்றிய மாநாடு குழிபிறைபட்டியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மூத்த உறுப்பினா் எம்ஆா். காடப்பன் கொடி ஏற்றி வைத்தாா். ஏ. சுப்பையா, சொக்கலிங்கம் ஆகியோா் தலைமை குழுவாக செயல்பட்டனா்.

மாவட்டச் செயலா் த. செங்கோடன், மாவட்டத் துணைச் செயலா் கேஆா். தா்மராஜன், மாவட்டப் பொருளாளா் என்ஆா். ஜீவானந்தம், தெருவோர வியாபாரிகள் சங்க மாவட்டத் தலைவா் டிஆா். ரங்கையா ஆகியோா் பேசினா்.

மாநாட்டில், ஒன்றியச் செயலா் - சி. சின்னாண்டி, துணைச் செயலா் - ஆா். வீரபுத்திரன், பொருளாளா் - ஏ. சின்னையா, ஒன்றியக் குழு உறுப்பினா்கள்- எம்ஆா். காடப்பன், மெய்யப்பன் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.

ADVERTISEMENT

மாநாட்டில், திருமயம் ஊராட்சி ஒன்றியம் மேலூா் ஊராட்சிக்கு உள்பட்ட பெரிய வாரியபட்டிக்கு சாலை அமைத்துத் தர வேண்டும். நற்சாந்துபட்டி நகரத்துக்கு பொது மயானம் அமைத்துத் தர வேண்டும். மலையளிங்கபுரம் தேவாலயத்துக்கு செல்லும் பாதையை சீரமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT