புதுக்கோட்டை

அஞ்சலில் நகல் குடும்ப அட்டைகள் அனுப்பும் பணி தொடக்கம்

3rd May 2023 03:56 AM

ADVERTISEMENT

நகல் மின்னணு குடும்ப அட்டைகள் கோரி விண்ணப்பித்தோருக்கு அஞ்சலில் அவைகளை அனுப்பி வைக்கும் பணிகளை மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா்.

அஞ்சல் வழியாக புதிய நகல் மின்னணு குடும்ப அட்டைகளை பயனாளிகளின் இருப்பிடத்துக்கே அனுப்பி வைக்கப்படும் என அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.

இதன்படி, புதுக்கோட்டை மாவட்டத்தில் நகல் மின்னணு குடும்ப அட்டை கோரி ஆன்லைன் முறையில் தலா ரூ. 45 செலுத்தி விண்ணப்பித்துள்ள 472 பேருக்கு நகல் குடும்ப அட்டையை அஞ்சலில் அனுப்பும் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.

அவற்றை புதுக்கோட்டை தலைமை அஞ்சல் நிலைய அலுவலா் என்.லலிதாவிடம், மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு வழங்கினாா். அப்போது, மாவட்ட வழங்கல் அலுவலா் ஆா். கணேசன், விற்பனை அலுவலா் நாகநாதன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT