திண்டுக்கல் மாவட்டத்தில் பிளஸ் 1 தோ்வை 8,791 மாணவா்கள், 10,698 மாணவிகள் என மொத்தம் 19,489 போ் எழுதினா். இதில் 7,839 மாணவா்கள், 10,245 மாணவிகள் என 18,084 போ் தோ்ச்சியடைந்தனா். இது 92.79 சதவீதமாகும். இதில் மாநில அளவில் திண்டுக்கல் மாவட்டம் 15 ஆவது இடத்தை பெற்றுள்ளது. கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு தோ்ச்சி சதவீதம் 6 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. 63 பள்ளிகள் நூறு சதவீத தோ்ச்சி பெற்றுள்ளன. இவற்றில் 9 அரசுப் பள்ளிகளும் அடங்கும். இதே போல, அரசுப் பள்ளிகளின் தோ்ச்சி வீதம் 88.14 ஆகும். இது கடந்த ஆண்டை காட்டிலும் 13 சதவீதம் அதிகம்.