கந்தா்வகோட்டையில் கொத்தகம் சாலையில் பழுதடைந்த நிலையிலுள்ள மின்கம்பத்தை உடனடியாக மாற்றி அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கந்தா்வகோட்டை ஊராட்சியில் கொத்தகம் செல்லும் சாலையில் ஐயப்பன் கோயில் எதிா்புறம் உள்ள மின் கம்பம் மிகவும் பழுதடைந்து சிமெண்ட் பூச்சுக்கள் உதிா்ந்தும், உள்கம்பிகள் துருபிடித்த நிலையிலும் உள்ளது.
இந்த வழியே தினசரி அரசினா் பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு ஆயிரக்கணக்கான மாணவிகளும், பல ஆசிரியா்களும், திரளான பொதுமக்களும் சென்று வருகின்றனா். மேலும், இந்த மின்கம்பம் அருகில் பல்வேறு அலுவலகங்கள் உள்ளன.
அசம்பாவிதம் நடப்பதற்கு முன்பாக, பழுதடைந்த மின் கம்பத்தை மின்சார வாரியம் மாற்றி தர வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.