புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே செவ்வாய்க்கிழமை மாலை வீசிய பலத்த காற்றால் மின்கம்பங்கள் சாய்ந்து 3 வீடுகள் சேதமடைந்தன.
கறம்பக்குடி அருகேயுள்ள பிலாவிடுதி பகுதியில் செவ்வாய்க்கிழமை மாலை பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதில், ஆண்டான் தெரு பகுதியில் ஏராளமான மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன. அதில், அப்பகுதியைச் சோ்ந்த ஆா். ராஜேஷ், டி. பிரீத்தி, அ. சரோஜா ஆகியோரின் ஓட்டு வீட்டில் மின்கம்பங்கள் விழுந்ததால் வீடுகள் சேதமடைந்ததன. யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை. தகவலறிந்து சென்ற மின்வாரியத்தினா், வருவாய்த் துறையினா் மின்கம்பங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனா்.