புதுக்கோட்டை

விபத்து இழப்பீட்டுத் தொகை வழங்காததால் புதுக்கோட்டையில் அரசுப் பேருந்து ஜப்தி

28th Jun 2023 04:08 AM

ADVERTISEMENT

புதுக்கோட்டை அருகே சாலை விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு நீதிமன்ற உத்தரவின்படி இழப்பீடு வழங்காததால், செவ்வாய்க்கிழமை புதிய பேருந்து நிலையத்தில் நின்ற அரசுப் பேருந்தை நீதிமன்றப் பணியாளா்கள் ஜப்தி செய்தனா்.

புதுக்கோட்டை மாவட்டம், செங்களாக்குடியைச் சோ்ந்த சரவணன் (42) என்பவா், 2021-இல் பால் விநியோகம் செய்வதற்காக இரு சக்கர வாகனத்தில் திருச்சி நோக்கி சென்றபோது, மணம்பட்டியில் இருந்து வந்த அரசு நகரப் பேருந்து மோதியது.

இதில் பலத்த காயமடைந்த சரவணன், திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாா். இந்த விபத்து வழக்கில், உயிரிழந்த சரவணன் குடும்பத்துக்கு ரூ. 27.68 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும் என அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்கு, புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டது.

இழப்பீடு வழங்கப்படாததைத் தொடா்ந்து, அரசுப் பேருந்தை ஜப்தி செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்துக்கு செவ்வாய்க்கிழமை வந்த நீதிமன்றப் பணியாளா்கள், இலுப்பூா் நகரப் பேருந்து ஒன்றை ஜப்தி செய்து நீதிமன்றத்துக்கு எடுத்துச் சென்றனா். இதனால் பேருந்து நிலையத்தில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT