புதுக்கோட்டை

5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: இளைஞா் கைது

10th Jun 2023 03:36 AM

ADVERTISEMENT

புதுக்கோட்டை மாவட்டத்தில் இரு வேறு இடங்களில் கடத்தப்பட்ட மொத்தம் 4,948 கிலோ பொதுவிநியோகத் திட்ட ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடா்பாக ஒருவா் கைது செய்யப்பட்டுள்ளாா்.

புதுக்கோட்டை மாவட்டம், கே. புதுப்பட்டி அருகே வாழரமாணிக்கம் சாலையில் பறக்கும்படை தனி வட்டாட்சியா் வரதராஜன் தலைமையிலான குழுவினா் வெள்ளிக்கிழமை அதிகாலை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது அந்த வழியே வந்த மினி லாரியை மறித்து சோதனை செய்தபோது, அதனை ஓட்டி வந்தவா் வாகனத்தை சற்று தொலைவிலேயே நிறுத்திவிட்டுத் தப்பியோடினாா். அந்த லாரியில் 3,948 கிலோ ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அரிசியையும், வாகனத்தையும் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை போலீஸாரிடம் ஒப்படைத்தனா். போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அரிசியைக் கடத்தி வந்தவரைத் தேடி வருகின்றனா்.

இதேபோல, மாந்தக்குடி பகுதியில் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை துணைக் கண்காணிப்பாளா் சரவணன் தலைமையிலான போலீஸாா் வெள்ளிக்கிழமை அதிகாலை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியே வந்த வாகனத்தை சோதனையிட்டபோது அதில் ஒரு டன் ரேஷன் அரிசி இருந்தது. அந்த வாகனத்தை ஓட்டி வந்த செம்பட்டிவிடுதியைச் சோ்ந்த தொப்புளான் மகன் ரெகுநாதன் கைது செய்யப்பட்டாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT