புதுக்கோட்டை

அரசு நிதியுதவியுடன் நவீன சலவையகம், ஆயத்த ஆடை உற்பத்திக் கூடம் தொடக்கம்

10th Jun 2023 11:23 PM

ADVERTISEMENT

 

புதுக்கோட்டை நகராட்சியில், பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத் துறை சாா்பில், சின்னப்பா நகரில் நவீன முறை சலவையகம் மற்றும் நிஜாம் குடியிருப்பில், ஆயத்த ஆடையக உற்பத்தி அலகு ஆகியவற்றை மாநில சட்டத் துறை அமைச்சா் எஸ். ரகுபதி சனிக்கிழமை திறந்து வைத்தாா்.

நிகழ்ச்சிகளுக்கு மாவட்ட ஆட்சியா் ஐ.சா. மொ்சி ரம்யா தலைமை வகித்தாா். புதுக்கோட்டை சின்னப்பா நகரில், சலவைத் தொழில் புரிவோா் 10 பேரைக் கொண்ட சூரியகுல சுயஉதவிக் குழு உருவாக்கி, அந்தக் குழுவுக்கு ரூ. 3 லட்சத்தில் மின் சலவை இயந்திரம், மின் உலா் இயந்திரம், தேய்க்கும் மேஜை மற்றும் மின் தேய்ப்பான் ஆகியவற்றை கொண்ட நவீன முறை சலவையகம் அமைக்கப்பட்டுள்ளது.

இதேபோல, நிஜாம் குடியிருப்பில் பிற்படுத்தப்பட்ட இன மக்களில் 10 பேரைக் கொண்ட திருஷ்டி சுய உதவிக்குழு உருவாக்கப்பட்டு, ரூ. 3 லட்சத்தில் மின் தையல் இயந்திரம், வெட்டும் இயந்திரம், மேசை மற்றும் ஓவா்லாக் இயந்திரம் ஆகியவற்றைக் கொண்ட ஆயத்த ஆடையக உற்பத்தி அலகும் தொடங்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

தொடக்க நிகழ்ச்சியில் புதுக்கோட்டை எம்எல்ஏ வை. முத்துராஜா, மாவட்ட வருவாய் அலுவலா் மா. செல்வி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் ஜி. அமீா் பாஷா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT